தலைப்புச் செய்தி

Wednesday, December 21, 2011

அரவிந்த் கெஜ்ரிவால் வருமான வரி பாக்கியாக ரூ.9,27,787 செலுத்த வேண்டும்


இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரே குழுவின் உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவாலின் இராஜினாமாவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் வருவாய்துறை உதவி ஆணையராக பணியாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2006 ம் ஆண்டு தனது இராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால் வருமான வரி பாக்கியாக ரூ.9,27,787 செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதன் காரணமாக அவரது இராஜினாமா ஏற்று கொள்ளப்படவில்லை.


இந்நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு பின் மத்திய அரசு இராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளது. அவர் மீதான பிரச்சினைக்கு தீர்வாக ரூ.9 இலட்சம் செலுத்திய 45 நாட்களுக்கு பிறகே அவரது இராஜினாமா ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அரவிந்த் கெஜ்ரிவால் வருமான வரி பாக்கியாக ரூ.9,27,787 செலுத்த வேண்டும்"

Post a Comment