மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
இந்தியாவின் தமிழக மாநிலத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அரசுப் பயணமாக மூன்று நாட்கள் ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று(16.12.2011) பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூடங்குளத்தில் முதல் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும்.
அணு மின் நிலையம் பாதுகாப்பானது என மக்களுக்கு புரிய வைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
திட்டமிட்டபடி முதல் அணு உலையில் மின் உற்பத்தி 2012ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் அங்கு நிலவி வரும் போராட்டம் காரணமாக 2012 மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல் அணு உலையின் உற்பத்தி தொடங்கி அடுத்த 6 மாதங்களில் இரண்டாவது அணு உலையின் உற்பத்தி தொடங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
0
comments:
on "விரைவில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கப்படும்: பிரதமர் உறுதி"
0 comments: on "விரைவில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கப்படும்: பிரதமர் உறுதி"
Post a Comment