தான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க உளவு விமானத்தை அமெரிக்காவிடம் திருப்பிக்கொடுக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் சிறப்பு புரட்சிக் காவல் படையின் பிரதித் தலைவர் கார்ட் ஜெனரல் ஹொஸைன் சலாமி இன்று ஞாயிற்றுக்கிழமை இதைத் தெரிவித்தார்.
கடந்த 4 ஆம்திகதி இவ்விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரான் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க உளவுவிமானம் ஈரானிய வான் பரப்பிற்குள் அத்துமீறியமை ஒரு யுத்த நடவடிக்கை எனக் கூறிய அவர், இதற்கு 'பெரிய' பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தாக ஈரானிய அரச தொலைக்காட்சி அறிவித்தது.
மேற்படி ஆர்.கியூ-170 ரக உளவுவிமானத்தை ஈரானிய இராணுவ அதிகாரிகள் ஆராய்வதை ஈரானிய தொலைக்காட்சி வியாழனன்று ஒளிபரப்பியது.
ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து 225 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஈரானிய நகரான காஷ்மரில் இவ்விமானம் கைப்பற்றப்பட்டதாக ஈரானிய அரச வானொலி அறிவித்துள்ளது.
தனது உளவுவிமானமொன்று தொலைந்திருப்பதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





0 comments: on "வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானத்தை திருப்பிக்கொடுக்க மாட்டோம்: ஈரான்"
Post a Comment