மனிலா:கனத்த மழையைத் தொடர்ந்து உருவான வெள்ளப் பெருக்கிலும் சூறாவளியிலும் சிக்கி பிலிப்பைன்ஸில் 440 பேர் மரணமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான நபர்களை காணவில்லை. தூங்கிக் கொண்டிருந்த வேளையில் பெரும்பாலானோர் இந்த ஆபத்தில் சிக்கினர்.
ககயன் தி ஓரோ என்ற ஊரில் மட்டும் 215 பேர் இறந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இலிகன் என்ற ஊரில் 144 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 12 மணி நேரமாகப் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல வீடுகள் மூழ்கியுள்ளன. இரவு மழை வலுத்ததில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் உறங்கும்போதே பலர் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் நாசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயிரக்ககணக்கான ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தொண்டர்களும் மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர்.





0 comments: on "பிலிப்பைன்ஸில் புயல், வெள்ளம் – 440 பேர் மரணம்"
Post a Comment