தலைப்புச் செய்தி

Monday, November 21, 2011

இஸ்லாமிய Facebook இணையதளம் இஸ்தான்பூலில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

உலகப்புகழ்பெற்ற சமூக வலைப்பின்னலான Facebook  ஒத்த Salamworld எனும் இஸ்லாமிய சமூகஇணையதளம் துருக்கியின் இஸ்தான்பூல் நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளது.இவ் இணையதளமானது புகழ்பெற்ற முஸ்லிம் வர்த்தகர்ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதுவரை இதில் அங்கத்துவம் பெறுவதற்காக ஒரு இலட்சம் பேர் எதிர்பார்த்துநிற்கின்றனர். இஸ்தான்பூல் நகரை தளமாகக் கொண்டு செயல்படவுள்ள Salamworld இணையதளமானது கெய்ரோ, மொஸ்கோ,துபாய் மற்றும் நியூயோர்க் போன்ற பல நாடுகளின் நகரங்களில் தனது கிளையை நிறுவவுள்ளது. இத்தளமானது 15மொழிகளில் தனது சேவையை வழங்கவுள்ளது. 'அரசியல் இல்லை', 'தடைஇல்லை', 'எல்லை இல்லை'என்பதே இதன் முதற்பக்க வாசமாக காணப்படுகிறது.

Salamworldஇணையதளமானது முதல் 3வருட இறுதியில் 100மில்லியன் பாவனையாளர்களைஎதிர்பார்க்கின்றது.இத்தளமானது முஸ்லிம் இளைஞர்களையும், அறிவுசார் முஸ்லிம் தலைவர்களையும், இஸ்லாத்தை படிக்க காத்துநிற்கும் வேற்றுமதத்தவர்களையும் நோக்காகக் கொண்டு செயற்படவுள்ளது.மேலும் Salamworld சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இஸ்லாமிய Facebook இணையதளம் இஸ்தான்பூலில் ஆரம்பிக்கப்படவுள்ளது."

Post a Comment