தலைப்புச் செய்தி

Monday, November 21, 2011

துருக்கியில் 634பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு வருடகாலத்தில் துருக்கியில் 634 பேர் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி மதவிவகாரங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.பல மதப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளார்கள்இதில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள் ஆவர் என துருக்கியின் ஆய்வுநிறுவனமொன்று தெரிவித்துள்ளது.இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களில் 467பேர்பெண்கள் ஆவர்.இவர்களில் 25சதவீதத்தினர் ஜெர்மன்,அமெரிக்கா,பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கியின் வலுவான மதமாக இஸ்லாம் காணப்படுகின்றது.நாட்டின் மொத்த சனத்தொகையில் 95சதவீதத்தினர் முஸ்லிம்கள் ஆவர்.மேலும் அங்கு சிறுபான்மையினராக பல்வேறு மதங்கள் காணப்படுவதுடன், அவர்களில் ரோமன் கத்தோலிக் மற்றும் புரஸ்டாந்து பிரிவுகளைச்சேர்ந்த கிறிஸ்தவர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். 

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "துருக்கியில் 634பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்."

Post a Comment