தலைப்புச் செய்தி

Monday, November 14, 2011

ஹைதராபாத்தில் முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல் – முஸ்லிம் பெண்கள் மீதும் தாக்குதல்


ஹைதராபாத்:ஹைதராபாத் மாநகரில் முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றவண்ணம் உள்ளது. நேற்று இரவு சித்தியம்பேர் பஜார் ரோட்டில் புர்கா அணிந்த பெண்கள் மீதும் தாடி முஸ்லிம் ஆண்கள் மீதும் சில ஹிந்துத்வா விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சித்தியம்பேர் பஜார் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீதிலிருந்து முஸ்லிம்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலர் காயமுற்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் 150  முதல் 200  பேர் வரை அவ்விடத்தில் கூடி இந்த பிரச்சனைக்கான காரணம் என்னவென்று அறிய முற்பட்டனர். போலீஸ் இணை ஆணையர் மகேஷ் பகவத் மற்றும் சிறப்பு தடுப்பு பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபமுற்று இருந்த முஸ்லிம்களை தடுத்து நிறுத்தியதுடன் வழக்கம்போல் முஸ்லிம்கள்மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் தாக்குதல் நடத்திய கட்டிடத்தை அடைய போலீஸ் முயற்சி செய்தது. ஆனால் உள்ளிருந்து கட்டிடம் பூட்டப்பட்டு இருந்ததால் திரும்ப வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் முதல் முஸ்லிம்கள் மீது ஆந்திராவில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஹைதராபாத்தில் முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல் – முஸ்லிம் பெண்கள் மீதும் தாக்குதல்"

Post a Comment