தலைப்புச் செய்தி

Monday, November 14, 2011

ஜெயலலிதாவின் பார பட்சம்-முஸ்லிம்களாக இருந்தால் ரூ 1 லட்சம் தான் !

புழல் ஏரியில் மூழ்கி இறந்த 3 நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியில் நவம்பர் 8-ம் தேதி மூழ்கி இறந்த சென்னை கிழக்கு அண்ணா நகரைச் சேர்ந்த சத்தாரின் மகள் சர்மிளா, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காதர் பாட்சாவின் மகன் முகமது ரிஸ்வான், சூரப்பட்டு சண்முகபுரத்தைச் சேர்ந்த முகமது நசீரின் மகன் முகமது ஆஷிக் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்று செய்து அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.


அகால மரணமடைந்த அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

குறிப்பு :
ஒரே கால கட்டம் - ஒரே நாளில் நடந்த உயிரழப்புகள், ஆனால் நிவாரணமோ அனைவருக்கும் தலா 2 லட்சம் வழங்கிய முதல்வர், முஸ்லிம் குடும்பங்களுக்கு மட்டும் 1 லட்சம் வழங்கியிருப்பது, அந்த குடும்பங்களை மேலும் வேதனையடைய செய்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஜெயலலிதாவின் பார பட்சம்-முஸ்லிம்களாக இருந்தால் ரூ 1 லட்சம் தான் !"

Post a Comment