குஜராத்தில் நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு போட்டியாக காங்கிரசாரும் எதிர் உண்ணாவிரதம் இருந்தனர். இதற்காக ஆமதாபாத் காந்தி ஆசிரமத்தில் மேடை போடப்பட்டு இருந்தது.
நரேந்திரமோடி உண்ணாவிரதத்தை தொடங்குவதற்கு முன்பாகவே காங்கிரசின் உண்ணாவிரதம் தொடங்கியது. மாநில காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலா தலைமையில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர். இவர்களும் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருப்போம் என்று அறிவித்துள்ளனர்.
சிறுபான்மையினரை கவர்வதற்காகவே நரேந்திர மோடி இந்த உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக சங்கர்சிங் வகேலா குற்றம் சாட்டினார்.
போட்டி உண்ணாவிரதத்தால் ஆமதாபாத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் உண்ணாவிரதத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.





0 comments: on "நரேந்திரமோடிக்கு எதிராக காங்கிரஸ் போட்டி உண்ணாவிரதம்"
Post a Comment