தென்கொரியாவில் ஒரு வருடத்தில் 15,413 பேர் தற்கொலை செய்துள்ளனர். தென்கொரியாவில் தற்கொலை பெருகியுள்ளது. மன அழுத்தத்தின் காரணமாக தங்கள் இன்னுயிரை மாய்த்து கொள்கின்றனர். படிக்க நல்ல பள்ளிகளில் இடம் கிடைக்காததாலும், பரீட்சையில் அதிக மார்க் எடுக்காததாலும் மாணவர்கள் தற்கொலை செய்கின்றனர்.
கடந்த 2009-ம் ஆண்டில் மட்டும் 15,413 பேர் தற்கொலை செய்ததாக கணக் கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இது 3 மடங்கு அதிகமாகும். எனவே, இதை தடுக்கும் முயற்சியில் தென்கொரியா அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக கூடுதல் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுவாக தற்கொலை சாவுகள் சியோலில் உள்ள ஹான் ஆற்றில் தான் நடைபெறுகிறது. பெரும்பாலானவர்கள் இந்த ஆற்றில் குதித்து தான் தங்கள் உயிரை விடுகின்றனர். எனவே, அந்த ஆற்றங்கரையிலும், பாலங்களிலும் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வறுமை ஒழிப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. உலக தற்கொலை தடுப்பு தினத்தில் பேசிய தென்கொரிய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுதுறை மந்திரி இந்த தகவலை தெரிவித்தார்.





0 comments: on "தென் கொரியாவில் ஒரு வருடத்தில் 15,413 பேர் தற்கொலை: தடுப்பு நடவடிக்கை தீவிரம்"
Post a Comment