தலைப்புச் செய்தி

Thursday, August 4, 2011

முபாரக் மீதான விசாரணை தொடங்கியது


எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (83) மீதான வழக்கு விசாரணை கெய்ரோவில் புதன்கிழமை தொடங்கியது.
மக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்படும் முன் மக்களைக் கொன்று குவித்ததாகவும், ஊழல் தொடர்பாகவும் அவர் கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு விசாரணை புதன்கிழமை தொடங்கியது. அவர் படுக்கையில் இருந்தவாறே விசாரணையில் பங்கேற்றார்.
அவரும், குற்றச்சாட்டப்பட்ட மற்றவர்களும் கம்பி வலையிடப்பட்ட கூண்டுக்குள் இருந்து விசாரணையில் கலந்துகொண்டனர்.
இந்த விசாரணை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
முபாரக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
சுமார் 30 ஆண்டுகள் அதிபராக இருந்த முபாரக் மக்கள் புரட்சியின் மூலம் கடந்த பிப்ரவரியில் தூக்கியெறியப்பட்டார்.
புரட்சியின்போது முபாரக் ஆதரவுப் படைகளின் தாக்குதலில் 846 பேர் உயிரிழந்தனர். ரப்பர் குண்டுகளால் தாக்கப்பட்டதில் 1400 பேர் பார்வை இழந்தனர்.இது தவிர, சட்ட விரோத முறைகளில் சொத்து குவித்ததாகவும், இயற்கை எரிவாயுவை சர்வதேச சந்தை நிலவரத்தை விட மிகக் குறைவான விலைக்கு இஸ்ரேலுக்கு விற்றதாகவும் அவர் மீதும், அவரது இரு மகன்கள் மீதும்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முபாரக் மீதான விசாரணை தொடங்கியது"

Post a Comment