எனவே அமெரிக்காவின் உளவுத்துறை ஆளில்லாமல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் உளவு விமானங்களை அனுப்பி அவர்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதில் பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர். அவர்களின் வீடுகளும் தரைமட்டமாகின்றன.
இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்கா சுட்டு கொன்றதில் இருந்து அமெரிக்கா மீது அந்நாட்டு மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். தங்கள் நாட்டிற்குள் வெளிநாட்டு சக்தி புகுந்து அதிகாரம் செய்வதாக கருதுகின்றனர்.
எனவே, அமெரிக்கா ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் நடத்தும் ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அகமது கஜா பாஷா சமீபத்தில் அமெரிக்கா சென்று இருந்தார். அங்கு அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் பொறுப்பை வகிக்கும் மைக்கேல் ஜெ மாரல் என்பவரை சந்தித்தார்.
அப்போது பாகிஸ்தான் மலைப்பகுதியில் அமெரிக்கா நடத்தும் ஆளில்லா விமான தாக்குதலை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.





0 comments: on "ஆளில்லா விமான தாக்குதலை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: பாகிஸ்தான் வலியுறுத்தல்"
Post a Comment