வேலூர், ஆக 26: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் 9ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 1999ம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மூன்று பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணா மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த கருணை மனு கடந்த 11 ஆண்டுகளாக குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் இருந்து வந்த்து.
இந்நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரது கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அண்மையில் நிராகரித்தார்.
இதையடுத்து, மூவரது தூக்குத் தண்டனையையும் நிறுத்தி வைக்க கோரி, தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், வேலூர் சிறைக்கு இன்று நேரில் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அங்கு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் சந்தித்து பேசினர்.
இதனிடையே, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் வரும் 9 ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட உள்ளதாக, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரிடமும் இன்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, மூவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கருணை மனு ஒன்றை சிறை அதிகாரிகள் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை 9ம் தேதி நிறைவேற்றப் படும் என்ற தகவல் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
0 comments: on "பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு 9ம் தேதி தூக்கு – ஜெவிடம் கருணை மனு"
Post a Comment