தலைமறைவான லிபிய அதிபர் கடாஃபியை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வருபவருக்கு ரூ.8 கோடி வழங்கப்படும் என்று புரட்சிப்படையினர் அறிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக புரட்சிப்படையினர் தொடங்கிய போராட்டம். இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைநகர் திரிபோலியை புரட்சிப்படையினர் கைப்பற்றி உள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது ஆனால், கடாஃபி என்ன ஆனார் என்பது குறித்து ஒரு செய்தியும் இல்லை.
இந்நிலையில், அதிபர் கடாஃபியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு 20 லட்சம் தினார் (ரூ.8 கோடி) வழங்கப்படும் என்று புரட்சிப்படையினர் அறிவித்துள்ளனர்.
மேலும் கடாஃபிக்கு நெருக்கமானவர்களோ அல்லது அவரது உறவினர்கள் அவரை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்து வந்தாலோ அவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும் என்றும் புரட்சிப்படையினர் அறிவித்துள்ளனர்.
0 comments: on "அதிபர் கடாஃபி தலைக்கு 8 கோடி நிர்ணயம்!"
Post a Comment