பாகிஸ்தான் கராச்சி நகரில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்களுக்கும், எதிர்க் கட்சியான முத்தாஜிதா குவாமி இயக்கம் கட்சியினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
சாதாரண மோதலில் ஆரம்பித்த பிரச்சனை பின்னர் கலவரமாக உருவெடுத்தது தொடர் கலவரத்தால் இரு தரப்பினரிடையே வன்முறை சம்பவங்களும் துப்பாக்கி சூடும் நடைபெறுவதால். அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கராச்சி நகரில்19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அங்கு நேற்று முழு அடைப்புக்கு முத்தாஹிதா குவாமி இயக்கம் அழைப்பு விடுத்து இருந்தது. அதற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன.
ஆனாலும் மீண்டும் அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். அதில் மேலும் 5 பேர் பலியானார்கள். இதுவரை அங்கு நடைபெற்ற கலவரத்தில் சுமார் 200 பேர் பலியாகி உள்ளனர். கலவரத்தை அடக்கும் பணியில் காவல்துறையினரும் காட்டிலாகா அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். தற்போது அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எனவே, கலவரத்தை அடக்க ராணுவத்தை அனுப்ப தேவையில்லை என பிரதமர் யூசுப் ரசாகிலானி தெரிவித்துள்ளார்.a
0 comments: on "பாக்.கில் தொடர் வன்முறை, கலவரம் 200 பேர் பலி!"
Post a Comment