அமெரிக்காவை சேர்ந்தவர் ஷானே பரூர் (28). இவரும் ஜோஷ்பாட்டல்(29), சாரா ஷரூத் ஆகிய 3 பேரும் ஈரானுக்குள் அனுமதி இன்றி நுழைந்தனர். அமெரிக்காவுக்கு உளவு வேலை பார்த்ததாக இவர்கள் மீது புகார் கூறப்பட்டது.
இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தெக்ரான் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட சாரா ஷரூத் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு அமெரிக்கா சென்று விட்டார்.பின்னர் அவர் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பரூர், பாட்டல் ஆகிய 2 பேருக்கும் தலா 8 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. அத்துமீறி ஈரானுக்குள் நுழைந்ததற்காக 3 ஆண்டும், உளவு வேலை பார்த்ததற்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் வழங்கப்பட்டது.
0 comments: on "ஈரானில் உளவு பார்த்த 2 அமெரிக்கருக்கு தலா 8 ஆண்டு ஜெயில்"
Post a Comment