தலைப்புச் செய்தி

Wednesday, July 27, 2011

சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பண விவரத்தை இந்தியா பெற வாய்ப்பு


சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த கறுப்பு பண முதலைகள் ஏராளமான பணத்தை போட்டு வைத்துள்ளனர். அது பற்றிய விவரங்களை பெறுவதற்காக அந்த நாட்டுடன், `இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம்' ஒன்றை இந்தியா செய்துள்ளது. இந்த ஒப்பந்தம், வருகிற அக்டோபர் 6-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் பிலிப்பி வெல்டி தெரிவித்தார்.
 
இதன் மூலம் சுவிட்சர்லாந்து அரசிடம் இருந்து வங்கிக் கணக்கு விவரங்களை இந்திய அரசு பெற்றுக் கொள்ள முடியும். இந்தியர்களின் பணம் ரூ.11 ஆயிரம் கோடி இருப்பதாக அந்த நாட்டு தேசிய வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பண விவரத்தை இந்தியா பெற வாய்ப்பு"

Post a Comment