தலைப்புச் செய்தி

Wednesday, July 27, 2011

பாகிஸ்தான் பெண் வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானி டெல்லி வந்தார்


பாகிஸ்தான் பெண் வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானி கர் டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சரத் சபர்வால், அங்குள்ள இந்திய தூதரகத்தின் இணைச் செயலாளர் ஒய்.கே.சின்கா, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சாகித் மாலிக் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
 
பின்னர் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஹினா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி என்ற முறையில் நான் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும். அண்டை நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புறவை மேம்படுத்தும் வகையில் முன்னோக்கி செல்ல முடியும் என்று நம்புகிறேன்.
 
 
இந்த பிராந்தியத்தில் இரு நாடுகளும் தங்கள் பொறுப்புணர்ச்சியை உணர்ந்து செயல்படும் என்றும் கருதுகிறேன் என்று கூறினார். டெல்லியில் நாளை எஸ்.எம்.கிருஷ்ணாவும், ஹினாவும் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் குறித்தும் அவற்றுக்கு தீர்வு காண்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பாகிஸ்தான் பெண் வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானி டெல்லி வந்தார்"

Post a Comment