தலைப்புச் செய்தி

Thursday, July 28, 2011

காங். எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை: 2 மாதத்தில் தெலுங்கானா பிரச்சினையை தீர்ப்போம்; குலாம்நபி ஆசாத் பேட்டி


ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சில வாரங்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்தனர். இதை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.
 
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்.எ.ல்.ஏ.க்கள் மீண்டும் பதவியை ராஜினாமா செய்தனர். தெலுங்குதேசம்- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இதையறிந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தம் முயற்சியில் மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் ஐதராபாத் சென்றார். அவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.
 
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தெலுங்கானா தனி மாநில பிரச்சினையை இன்னும் 2 மாதத்தில் தீர்த்து விடுவோம். இதற்கான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளை சேர்ந்த எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். தெலுங்கானா விவகாரத்தில் யாருக்கும் பாதகம் இல்லாமல் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "காங். எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை: 2 மாதத்தில் தெலுங்கானா பிரச்சினையை தீர்ப்போம்; குலாம்நபி ஆசாத் பேட்டி"

Post a Comment