கொல்கத்தா, மே 13: கம்யூனிஸ்ட்களின் 34 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஆம் மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் தோல்வியைச் சந்திக்துள்ளது.
அசைக்க முடியாத சக்தியாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்கத்தில் ஆட்சி புரிந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இப்போது முதல் முறையாக தோல்வியைச் சந்தித்துள்ளது. மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யவே தோல்வியைச் சந்தித்துள்ளார். முதல்வரே தோல்வியடைந்திருப்பது கம்யூனிஸ்ட் தலைவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கம்யூனிஸ்ட்களின் கோட்டை எனக் கருதப்பட்ட மேற்கு வங்க மாநில ஆட்சியை அகற்றிய பெருமை திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியையே சாரும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் சரிவு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது எனலாம். 2008-ம் ஆண்டில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தது அக்கட்சி. அடுத்து 2009-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் மிகப் பெரும் சரிவைச் சந்தித்தது. இப்போது ஆட்சியையே இழந்துவிட்டது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளதற்குக் காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புதான். கம்யூனிஸ்ட் கட்சியினர் வலுவாக உள்ள மேதினிப்பூர், பாங்குரா, புரூலியா ஆகிய பகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்பகுதிகளில் கடந்த மக்களவைத் தேர்தலிலும் திரிணமூல் காங்கிரஸýக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.
இப்பகுதியில் உள்ள இளைய தலைமுறையினரும், முதியவர்களும் மாற்றம் விரும்பி கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக வாக்குகளைப் பதிவு செய்தனர். இதுவும் கம்யூனிஸ்ட் கட்சி வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
கொல்கத்தா, ஹெüரா, கிழக்கு மேதினிப்பூர், டார்ஜீலிங் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியது. ஹூக்ளி, வடக்கு 24 பர்கானா மாவட்டம், தெற்கு 24 பர்கானா மாவட்டம் உள்ளிட்டவற்றிலும் அக்கட்சிக்கு தோல்வியே கிட்டியது. கூச்பிகார், தெற்கு தினாஜ்பூர், வடக்கு வங்காளம் ஆகிய பகுதிகளிலும் திரிணமூல் கூட்டணியே வெற்றி பெற்றது.
முதல்வர் தோல்வி: மம்தாவின் திரிணமூல் கட்சி எழுச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜாம்பவான்கள் தோற்றுப்போயினர். முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி, நிருபம் சென், கெüதம் தேவ், அசிம் தாஸ்குப்தா ஆகியோர் தோல்வியடைந்த முக்கிய பிரமுகர்களாவர்.
புத்ததேவ் ராஜிநாமா: கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வி சந்தித்ததையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் புத்ததேவ் பட்டாச்சார்ஜி. அவர் போட்டியிட்ட ஜாதவ்பூர் தொகுதி முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்னரே தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார். கம்யூனிஸ்ட் கட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை முதல்வர் பட்டாச்சார்ஜி நன்கு உணர்ந்திருந்தார். கட்சி, ஆட்சி மீது மக்களுக்குள்ள வெறுப்பைக் குறைக்க பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார். ஆனால் அதை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.
மம்தாவின் ஆதரவு அலை காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி தொண்டர்களை ஒன்றிணைந்தது. இதன் மூலம் மால்டா, முர்ஷிதாபாத், நாடியா தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றி பெற உதவியது.
பிரதமர் வாழ்த்து: மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு பிரமதர் மன்மோகன் சிங், அக்கட்சித் தலைவரும் ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் மம்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
காத்திருக்கும் சவால்கள்: மிகுந்த எதிர்பார்ப்புகளோடு ஆட்சிக்கு வந்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. முதலில் நக்ஸலைட் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். அடுத்து மாநிலத்தின் நிதி நிலையை மேம்படுத்த வேண்டும். இவை இரண்டுமே மம்தாவின் தொலைநோக்கு பார்வைக்கு முட்டுக்கட்டைகளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாவோயிஸ்டுகளை சமாளிப்பது ஒருபுறம் இருந்தாலும், கோர்க்கர் ஜன்முக்தி மோர்ச்சா மலைப்பகுதி கிளர்ச்சியையும் சமாளித்தாக வேண்டும். மம்தாவின் அமைச்சரவையில் அமித் மித்ரா, மணீஷ் குப்தா, பிரத்யா பாசு, பார்த்தா சாட்டர்ஜி ஆகியோர் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பான ஆட்சியை அளிப்போம்: மம்தா
கொல்கத்தா, மே 13: சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளிப்போம் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறினார். 34 ஆண்டுக்கால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து திரிணமூல் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து இமாலய வெற்றி பெறச் செய்துள்ளனர். அவர்களுக்கு மிகச் சிறப்பான ஆட்சியை அளிப்போம், பாகுபாடற்ற ஆட்சியாக இது இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டுத் தருவதே புதிய அரசின் பிரதான கடமையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியது: மாநிலத்தில் தொழில்துறையினர் மற்றும் விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு புதிய தொழில் கொள்கை ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஒரே சீரான கொள்கை ஒன்றை வகுக்குமாறு மத்திய அரசை வற்புறுத்தப் போவதாகவும், இதன் மூலம் விவசாயிகள் தங்களது உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படாது என்றும் கூறினார்.
இந்த நாள் ஜனநாயக விடுதலைக்கான நாள். தேர்தலை மிகச் சிறப்பாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலேயே மக்கள் அச்சமின்றி வாக்களித்தனர்.
ஆனால் 2004-ம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு சென்ற ஒரே ஒரு நபர் நான்தான். ஆனால் நமது மக்கள் மீது பல்வேறு தாக்குதல் நடந்தது. எனக்கென்று தனி குடும்பம் ஏதும் கிடையாது. அம்மா, இந்த மண், இங்குள்ள மக்கள்தான் எனது சொந்தங்கள். இம்மாநிலத்தில் ஜனநாயக விடுதலைக்காக கடந்த 34 ஆண்டுகளாக போராடி வருகிறேன். கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் எத்தகைய முன்னேற்றமும் எட்டப்படவில்லை. அனைத்தையுமே அவர்கள் அரசியலாக்கினர். இதனாலேயே மாநிலத்தில் அனைத்துத் துறைகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி தோற்று விட்டது. அதன் வெளிப்பாடுதான் இந்தத் தேர்தலில் எதிரொலித்துள்ளது. கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தில் அரசு ஆதரவோடு வன்முறை அரங்கேறின என்று குற்றம் சாட்டினார் மம்தா.
இடதுசாரிக் கொள்கைகளை மதிப்பதாகக் குறிப்பிட்ட மம்தா, அவர்கள் இடதுசாரி சித்தாந்தத்திலிருந்து தடம்மாறிச் சென்றுவிட்டனர். இதைத்தான் மக்கள் விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் மக்களை வாக்களிக்கவே அனுமதிக்கவில்லை. இதுவரை நடைபெற்ற ஆட்சி மார்க்சிஸ்ட்களுக்காக மார்க்சிஸ்ட்களால் ஆளப்பட்டது என்றார். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல், தங்களது எண்ணப்படி அவர்கள் ஆண்டதால்தான் அவர்கள் வீழ்ச்சியைச் சந்தித்தனர் என்றார்.
ரயில்வேத்துறையை திரிணமூல் தக்கவைத்துக் கொள்ளும்: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் பதவியை என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, முதல்வராக தான் பொறுப்பேற்றாலும், தனது கட்சி ரயில்வேத் துறையை தக்க வைத்துக் கொள்ளும் என்றார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விரைவில் சந்தித்துப் பேச உள்ளதாக அவர் கூறினார். தமது கட்சிக்கு உள்ள ஒரே ஒரு கேபினட் அமைச்சர் பதவி இதுதான் என்றும் அவர் கூறினார். ரயில்வே துறை மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்துள்ளோம். மேலும் பல திட்டங்களைச் செய்ய உள்ளோம். எனவே ரயில்வேத் துறையை திரிணமூல் கட்சி தக்கவைத்துக் கொள்ள உரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments: on "திரிணமூல் எழுச்சி: முடிவுக்கு வந்தது கம்யூனிஸ்ட்"
Post a Comment