தமிழக அரசியலில் இருந்து கருணாநிதி ஓய்வு பெற்று திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர்.
தமிழ சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து கருத்து கூறிய கருணாநிதி, “மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என்று கூறியிருந்தார்.
திமுகவின் தோல்வி குறித்தும் கருணாநிதியின் பதில் குறித்தும் அறிக்கை மூலம் கருத்து கூறியுள்ள கி.வீரமணி, “ஓய்வு என்பது சட்டசபை, ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணிகளுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம் களம் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக" என்று கூறியுள்ளார்.
ஆட்சியில் இருக்கும் போதும் தேர்தல் நேரங்களிலும் தன்னால் நேரடியாகப் பதில் சொல்ல இயலாதவற்றுக்கு கி.வீரமணி மூலம் கருணாநிதி பதில் அளித்து வந்தார். இப்போது ஓய்வு என்று கருணாநிதி கூறியதற்கு விளக்கமாக கருணாநிதி சுயமரிதைப் பிரச்சாரம், பகுத்தறிவு, எழுத்து போன்றவற்றில் ஈடுபடுவார் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் பதவியல் இருந்து விலகி, அதனை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு, பகுத்தறிவுப் பிரச்சாரம் போன்றவற்றில் கருணாநிதி ஈடுபடுவார் என்றே வீரமணியின் அறிக்கைக்கு அரசியல் நோக்கர்கள் விளக்கம் தருகின்றனர்.
திமுக வெற்றி பெற்றிருந்தால் ஸ்டாலின்தான் முதல்வர் என்பதுதான் கருணாநிதியின் திட்டமாக இருந்தது என்று கூறும் அவர்கள், தற்போது ஆட்சியில் இல்லாத நிலையில் தமக்குப் பின் திமுகவின் தலைவராக எவர் வரவேண்டும் என்ற பிரச்சனையில் திமுக சிதைந்துவிடக் கூடாது என்று எண்ணும் கருணாநிதி, தம்முடைய வாழ்நாளிலேயே ஸ்டாலினை திமுகவின் தலைவராக நியமிப்பார் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அழகிரியின் வருகை திமுகவுக்கு அடியாள் கட்சி என்ற இமேஜை ஏற்படுத்தியது என்றும் கனிமொழியின் வருகை மற்றும் செயல்களால் கட்சியும் குடும்பமும் மீளமுடியா பல்வேறு சிக்கல்களில் சிக்குண்டு கிடப்பதாகவும் கருதும் அரசியல் நோக்கர்கள், மு.க.ஸ்டாலினால் கருணாநிதிக்கோ திமுகவுக்கோ அவப்பெயர் ஏற்படவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சாதனைகளை மட்டுமின்றி சோதனைகள் பலவற்றையும் கண்ட கருணாநிதி என்ன செய்வார் என்பது அடுத்த சில வரங்களுக்குள் தெரிந்துவிடும்.

0 comments: on "கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா?"
Post a Comment