தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததை அடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள அவர், வெள்ளிக்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வந்தார். அப்போது, தமிழகத்தில் திமுக தோல்வியடைந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த ராசா, நான் நீதிமன்றக் காவலில் இருக்கிறேன். எனவே இதற்கு பதிலளிக்க முடியாது. நீங்கள் என்னிடம் இப்படி கேள்வி கேட்கவும் கூடாது என்றார்.
பின்னர் நீதிபதி ஒ.பி. சைனி முன்னிலையில் ஆஜரானபோது பேசிய ராஜா, தேர்தல் முடிவுகளை நான் பார்க்கவில்லை. ஆனால் தேர்தல் முடிவுகள் கூறித்து மற்றவர்கள் பேசியதில் இருந்து அறிந்துகொண்டேன் என்றார்.
ஏற்கெனவே மத்தியில் ஆளும் கூட்டணியிலும், தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக இருந்தபோதே அக்கட்சியின் முக்கியமானவரான ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மாநிலத்தில் திமுக ஆட்சியைப் பறிகொடுத்திருப்பது அவருக்கு சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜரானபோது ஆ.ராசா மிகவும் பதற்றமாக இருந்ததைக் காண முடிந்தது.

0 comments: on "திமுக தோல்வி: ஆ.ராசா சோகம்"
Post a Comment