ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் அரீஸ்குமார் (வயது 33). இவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். சென்னை தேனாம்பேட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் தனது தாயை காண வேண்டி ஆந்திராவிலிருந்து சென்னை வந்திருந்தார்.
தாயாரை காணச் செல்வதற்கு முன்பாக சென்னையில் தனக்கு அறிமுகமான நகை கடை முதலாளியிடம் நகை செய்யவதற்காக 4 1/2 கிலோ எடையுள்ள தங்ககட்டிகளை வாங்கி கொண்டு, மருத்துவமனைக்கு சென்று தாயாரை நலம் விசாரித்து விட்டு ஆட்டோவில் தனது அறைக்கு திரும்பியிருக்கிறார். வருகின்ற வழியில் அலுவல் காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் இறங்கி விட்டார்.
இறங்கிய பின்புதான் ஞாபகம் வந்தது தங்கக் கட்டிகள் இருந்த பையை எடுக்காமலேயே இறங்கி விட்டார் என்று. எனவே அதிர்ச்சி அடைந்த அரீஸ்குமார் தான் வந்த ஆட்டோவை தேடிய போது கிடைக்கவில்லை. இது பற்றி ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் அரீஸ்குமார் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவலர்கள் வழக்கு பதிவு செய்து நகை கட்டிகளுடன் மாயமான ஆட்டோவை தேடி வருகிறார்கள்.

0 comments: on "கோடி ரூபாய் தங்க கட்டிகளுடன் ஆட்டோ மாயம்"
Post a Comment