ஐதராபாத்தில் உள்ள அரசு ஜூனியர் டாக்டர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்குள்ள காந்தி, உஸ்மானியா, நீலோபர் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் பலர் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
நீலோபர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ஜூனியர் டாக்டர்கள் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு வந்த குழந்தைகள் பலருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையறிந்ததும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
சிலர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் கூறும்போது, கடந்த சில மாதங்களாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி யாராவது இறந்து போனால் நோயாளியின் உறவினர்கள் டாக்டர்களை தாக்குகிறார்கள்.
இதனால் பாதுகாப்பு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் ஆந்திர அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. எங்களுக்கு பாதுகாப்பு அளித்தால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்றனர்.




0 comments: on "பிரதி ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஸ்டிரைக்கால் 8 குழந்தைகள் பலி"
Post a Comment