தலைப்புச் செய்தி

Wednesday, March 16, 2011

இழந்த பெண்காசி நகரை மீட்க லிபியா இராணுவம் தீவிர முயற்சி!

லிபியாவில் கடாஃபிக்கு எதிரான போராட்டக்காரர்கள் பெங்காசி, ஷாலியா, ராவ்வஜப், அஜ்தா பியா உள்ளிட்ட நகரங்களைப் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவற்றை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராணுவத்துக்கு கடாபி உத்தர விட்டார். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் வசம் இருந்த நகரங்கள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.


இந்த தாக்குதலுக்குப் பின் ஷாவியா, ராவ் வஜப், பிரகா ஆகிய நகரங்களை ராணுவம் மீட்டு மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதை தொடர்ந்து அஜ்தாபியா நகரை மீட்பதில் முனைப்பாக இருந்தது.

அந்நகரின் மீது கடாபியின் ராணுவ விமானங்களும், ஆதரவாளர்களும் ராக்கெட் குண்டுவீசி தாக்கினர். போராட்டக் காரர்களின் புரட்சி படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். கடந்த 3 நாட்களாக நடந்த சண்டையில் அஜ்தாபியா நகரம் ராணுவம் வசம் வீழ்ந்தது. தற்போது அது கடாபியின் ஆதரவாளர்கள் வசமாகி விட்டது.

போராட்டக்காரர்களின் வசமுள்ள லிபியாவின் 2-வது பெரிய நகரமான பெங்காசியை கைப்பற்றுவதில் ராணுவம் மிக தீவிரமாக உள்ளது.

இதற்கிடையே, லிபியாவின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது மற்றும் அங்கு போர் விமானங்கள் பறக்க தடை குறித்து விவாதிப்பதற்கான வளர்ந்த நாடுகள் கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்தது.

அதில், பிரான்ஸ் தவிர மற்ற 7 நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வில்லை. பிரான்ஸ் மட்டுமே போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மற்ற நாடுகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. லிபியா மீது தீவிர நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா.சபையை வலி யுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

இது அதிபர் கடாபிக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், அவருக்கு ஐரோப்பிய யூனியனில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கடாபியின் நெருங்கிய நண்பரான இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி இவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் லிபியப் போராட்டக்காரர்களை பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஷி அங்கீகரித்துள்ளார். இது கடாபிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இழந்த பெண்காசி நகரை மீட்க லிபியா இராணுவம் தீவிர முயற்சி!"

Post a Comment