தலைப்புச் செய்தி

Saturday, March 12, 2011

ஜப்பானில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 20 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் மற்றும் பசுபிக் கடலை அண்டிய சுமார் 20 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


பிலிப்பைன்ஸ் இந்தோனேசியா, நியூசிலாந்து தைவான், பெரு, சிலி அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி, மெக்ஸிகோ, மற்றும் மத்திய, தென் அமெரிக்க பகுதிகள் உள்ளிட்ட 20 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுனாமி ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக அங்கிருந்து சென்றுவிடுமாறு அலாஸ்கா பகுதியின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அவசரகால மேலாண்மை இயக்குநர் ஜான் மேடன் தெரிவித்தார்.

இதேவேளை ஹவாய் தீவுப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இன்று இந்தோனேசியா நியூசிலாந்து ஆகிய நாடுகளை ஆழிப்பேரலை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஜப்பானில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 20 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!"

Post a Comment