தலைப்புச் செய்தி

Sunday, February 6, 2011

எகிப்து அதிபர் பதவியில் இருந்து முபாரக்கை வெளியேற்ற திட்டம்: சுலைமானை இடைக்கால அதிபராக்க முடிவு

எகிப்து அதிபர் பதவியில் இருந்து முபாரக்கை வெளியேற்றி விட்டு சுலைமானை இடைக்கால அதிபராக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.


எகிப்து அதிபராக ஹோஸ்னி முபாரக். கடந்த 30 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். அவர் பதவி விலக வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நோபல் பரிசு பெற்ற மொகமது எல்பராடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. போராட்டத்தில் இதுவரை 156 பேர் உயிரிழந்துள்ளனர்.

800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, அதிபர் முபாரக் பதவி விலக போராட்டக்காரர்கள் நேற்று இறுதி கட்ட கெடு விதித்து இருந்தனர்.

போராட்டம் தீவிரம் இருந்தும் பதவி விலக முபாரக் மறுத்து விட்டார். எனவே, நேற்று மீண்டும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடைபெறும் தஹ்ரிர் சதுக்கத்தில் திரண்டனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

எகிப்தில் நடைபெறும் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து அனுமதி ஏற்படுத்த வலியுறுத்தி வருகின்றன.

பல நாடுகளில் முபாராக்குக்கு எதிராக எகிப்து தூதரகத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதற்கிடையே, எகிப்தில் அமைதியை நிலை நாட்ட அதிபர் முபாராக் உடனடியாக பதவி விலக வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.

அதற்கு முன்னதாக முபாராக் அரசு போராட்டக்காரர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போராட்டக்காரர்களை அடக்குவதில் இருந்து ராணுவம் விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் ஒபாமா அரசு எகிப்து தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

அமெரிக்க ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ் எகிப்து ராணுவ மந்திரியை டெலி போனில் அழைத்து பேசினார். முபாரக் வெளியேறும் பட்சத்தில் தற்போது துணை அதிபராக இருக்கும் ஒமர் சுலைமான் தலைமையில் இடைக்கால அரசு அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இது குறித்து கருத்து கூறிய அமெரிக்க அதிபர் ஒபாமா, எகிப்து அதிபர் பதவியில் இருந்து முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டும் என கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "எகிப்து அதிபர் பதவியில் இருந்து முபாரக்கை வெளியேற்ற திட்டம்: சுலைமானை இடைக்கால அதிபராக்க முடிவு"

Post a Comment