தலைப்புச் செய்தி

Monday, January 17, 2011

இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகரித்துள்ள ஆங்கில மோகம்! ஆய்வில் ஆச்சரியம்

இளைய தலைமுறையினர் மத்தியில் ஆங்கில மொழி ஏன் பிரபலமடைந்துள்ளது என்பதைக் கண்டறிய கியுபெக் மாநில ஆசிரியர்கள் சங்கம் ஆய்வொன்றை நடத்தியுள்ளனர்.


பெரும்பாலான இளைய தலைமுறையினர் தங்களது இரண்டாம் நிலை பட்டப் படிப்புக்கு பின் ஆங்கிலத்தின் பால் கவரப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிட்பட்டன. கியுபெக் ஜூனியர் ஆங்கில கல்லூரியில் பயிலும் மாணவர்களுள் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் தொழில் செய்ய அல்லது பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் கல்வி பயிலவே விரும்புகின்றனர், என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கியுபெக் மாநிலத்தில் அன்றாட மொழியாக பிரஞ்சு மொழி இருக்கவேண்டும் என்பதை நோக்காகக் கொண்ட மொழிச் சட்டம் கடந்த 33 வருடங்களாக அமுலில் உள்ளது.

இதையும் மீறி ஆங்கில மோகம் இளைய தலைமுறையை ஆக்கிரமித்துள்ளது என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நிலைப் பள்ளி முடிவடைந்தவுடனேயே பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தின் பால் ஈர்க்கப்படுகின்றனர் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகரித்துள்ள ஆங்கில மோகம்! ஆய்வில் ஆச்சரியம்"

Post a Comment