மிகவும் அபாயம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ள 28 பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் தற்காலிக பாதுகாப்பு வீரர்கள் தயார் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளனர். இன்று வடக்குப் பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் முன்னெச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கம்ப்ரியாவின் பல பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையும் யோர்க்ஷிர், நோர்தும்பெர்லாந்து பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படக் கூடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று ஸ்காட்லாந்திலும் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது. மணிக்கு 60 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.






0 comments: on "பிரிட்டனில் பலத்த வெள்ள அபாய எச்சரிக்கை."
Post a Comment