குமரி மாவட்டம் கொல்லங்கோட்டை அடுத்துள்ள வள்ளவிளை கலிங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் உசேன் - பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் உசேன் ஒவ்வொரு மாதமும் மனைவிக்கு பணம் அனுப்பி வைப்பார். சமீபத்தில் விடுமுறையில் ஊர் திரும்பிய உசேன் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளைக் காணாமல் கவலையுற்றார்.
வீட்டிலிருந்த நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தையும் காணவில்லை என்பது பின்னர் அவருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உசேன், மனைவி மற்றும் குழந்தைகளையும், காணாமல் போன நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தையும் கண்டுபிடித்து தரும்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்ததன் பேரில் கொல்லங்கோடு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
உசேனின் மனைவி பானுவும் அவரது மகள்களும் களியக்காவிளையிலுள்ள அவரது தாய் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை மீட்டு போலீசார் உசேனிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சிலர், பானு தங்களிடம் லட்சக்கணக்கில் வட்டிக்கு பணம் கடன் வாங்கியுள்ளதாகவும், அதனை திரும்ப வாங்கித் தரும்படியும் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் பானுவிடம் விசாரணை செய்தபோது, உசேன் வெளிநாட்டில் இருந்த சமயத்தில் பக்கத்துதெரு வாலிபர் ஒருவர் வீட்டுக்கு வந்து தன்னை மிரட்டி நிர்வாணப் படம் எடுத்து விட்டதாக கூறினார். மேலும், அந்த படத்தை இன்டெர்நெட்டில் வெளியிட்டு அவமானப்படுத்தப் போவதாகவும் மிரட்டி தன்னிடமிருந்த நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை பறித்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பானுவின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், நிர்வாணப்படுத்தி படம் எடுத்த வாலிபர் யாரென்று கேட்டதற்கு சரியான விபரத்தை கூறாமல் திணறினார்.
தன்னிடமிருந்து சுமார் ரூ.80 லட்சம் மதிப்புள்ள வரை நகை மற்றும் பணத்தை அந்த வாலிபர் கறந்து விட்டதாக மட்டும் பானு திரும்பத் திரும்ப கூறி வருவதால், அவர் கூறுவது உண்மைதானா என்று கண்டறிய தனிபோலீஸ்படை அமைத்து விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.





0 comments: on "வட்டி பணத்தை திருப்பிச் செலுத்தாததால் இளம்பெண் நிர்வாணப் படம் எடுக்கப்பட்டாரா?"
Post a Comment