தலைப்புச் செய்தி

Monday, January 31, 2011

குறைவாக உறங்கினால் உடல் பருக்கிறது! கனேடிய ஆய்வாளர்களின் புதிய ஆராய்ச்சி முடிவு

வார இறுதி நாட்களில் குழந்தைகள் போதிய நேரம் தூங்காமல் இருப்பதால் அவர்களின் உடல்பருமன் அதிகரிக்கின்றது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.


அமெரிக்கச் சிறுவர்களுள் ஆறில் ஒரு பங்கினர் ஏற்கனவே உடல்பருமன் அதிகம் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.

4 வயதுக்கும் 10 வயதுக்கும் இடைப்பட்ட 300 சிறுவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். உடல்பருமன் மிக்க சிறுவர்களின் உறக்கம் முறையான ஒரு பழக்கத்தின் கீழ் இல்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறைந்த நேரம் உறங்குகின்றார்கள், அதிகம் சாப்பிடுகின்றார்கள், உடல் பயிற்சியும் கிடையாது எனவே உடல் பருக்கின்றது என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய சிக்காகோ பல்கலைக்கழக சிறுவர் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த ஆய்வாளர் டொக்டர்.டேவிட் கொஸால் தெரிவித்துள்ளார்.

கடந்த 50 வருடங்களாக சிறுவர்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரித்து வருவதோடு அவர்கள் உறங்கும் நேரமும் குறைந்து வருகின்றது என்று அவர் மேலும் கூறினார். ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சிறுவர்களுக்கு ஒரு கருவி வழங்கப்பட்டு அவர்களின் உறக்க அளவு மதிப்பிடப்பட்டது.

சாதாரண எடை கொண்ட சிறுவர்களின் உறக்கத்தில் ஒரு ஒழுங்குமுறை காணப்படுகின்றது. ஆனால் எடை கூடிய பிள்ளைகளிடம் இது இல்லை.

பாடசாலை செல்லும் சிறுவர்கள் குறைந்த பட்சம் ஒன்பது மணிநேரம் உறங்க வேண்டும் என்று அமெரிக்காவின் தேசிய இருதய நோய், நுரையீரல் மற்றும் இரத்த நிலையம் சிபார்சு செய்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "குறைவாக உறங்கினால் உடல் பருக்கிறது! கனேடிய ஆய்வாளர்களின் புதிய ஆராய்ச்சி முடிவு"

Post a Comment