தலைப்புச் செய்தி

Wednesday, January 12, 2011

ஹிந்துக்கள் அஜ்மீர் தர்ஹா செல்வதைத் தடுக்கவே அங்கு குண்டு வைத்தோம் - சுவாமி அஸீமானந்தா

அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிகளவில் விஜயம் செய்வதால் அதனைத் தடுக்கும் முகமாகவும், இந்துக்களை பயமுறுத்தும் முகமாகவுமே அஜ்மீர் தர்காவில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது என்று கைதாகியுள்ள இந்து தீவிரவாத சாமியார் ஆசீமானந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்து தீவிரவாதிகளே காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாமியார் ஆசீமானந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாமியார் ஆசீமானந்த் மக்கா மசூதி குண்டுவெடிப்பு, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களிலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ள ஆசீமானந்த், இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த இரு தினங்களுக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகரான, பின்னர் கொலை செய்யப்பட்டு விட்ட சுனில் ஜோஷி தன்னை வந்து சந்தித்ததாகவும், அவருடன் ராஜ் மற்றும் மெஹல் என்ற இருவரும் வந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜோஷி தன்னிடம், அவரது ஆட்கள்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பை நடத்தியதாகவும், சம்பவம் நடந்தபோது அவர் தர்காவில் தான் இருந்ததாகவும் தெரிவித்ததாக கூறினார். மேலும், இந்த குண்டுவெடிப்பை நடத்துவதற்காக இரண்டு முஸ்லீம் சிறுவர்களை மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவரான இந்திரேஷ் தன்னிடம் அனுப்பி வைத்ததாகவும், அந்த சிறுவர்கள் தான் வெடிகுண்டை தர்காவுக்குள் சென்று வைத்ததாகவும் ஜோஷி தன்னிடம் தெரிவித்ததாக ஆசிமானந்த் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணம் அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் பெருமளவில் விஜயம் செய்து வருவதால் அதனைத் தடுக்கும் வண்ணமும், இந்துக்களை பயமுறுத்தவுமே என்று ஆசிமானந்த் கூறியுள்ளார்.

மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் தவறாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஒருவர் சுவாமி ஆசிமானந்துடன் நன்முறையில் நடந்து கொண்டதைத் தொடர்ந்து ஹைதராபாதில் உள்ள மக்கா மசூதியின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தனக்குத் தொடர்பு இருப்பதாக சில தினங்களுக்கு முன் சாமியார் ஆசிமானந்த் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஹிந்துக்கள் அஜ்மீர் தர்ஹா செல்வதைத் தடுக்கவே அங்கு குண்டு வைத்தோம் - சுவாமி அஸீமானந்தா"

Post a Comment