ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதுமே வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் பிரிஸ்பன் நகரம் அருகே உள்ள தாவோப்டா என்ற ஊருக்குள் திடீரென காட்டு வெள்ளம் புகுந்தது. 8 அடி உயரம் வரை வந்த இந்த திடீர் வெள்ளம் சுனாமி போல தாக்கியது.
இதில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. தெருவில் நடந்து சென்றோரை வெள்ளம் இழுத்து சென்றது. சாலைகளில் சென்று கொண்டிருந்த கார்களையும் அதில் இருந்தவர்களோடு இழுத்து சென்றது. 4 மணி நேரம் இந்த வெள்ள தாக்குதல் நீடித்தது. இதில் சிக்கி 19 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். 72 பேரை காணவில்லை.
அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினரும், மீட்பு படையினரும் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளம் குறித்த பெடரல் கட்சி எம்.பி. இயான் மேக் பார்லன் கூறும்போது, நான் 20 வருடமாக இங்கு வசித்து வருகிறேன். இந்த பகுதியில் இதுவரை இது போன்ற வெள்ளத்தை பார்த்தது இல்லை. வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திவிட்டது என்றார்.





0 comments: on "ஆஸ்திரேலியாவில் திடீர் வெள்ளத்துக்கு 19 பேர் பலி: 72 பேரை காணவில்லை"
Post a Comment