தலைப்புச் செய்தி

Thursday, January 6, 2011

மீண்டும் ஒரு பனிப்புயல் தாக்கும் - வானிலை எச்சரிக்கை

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் பகுதிகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று மீண்டும் ஒரு பனிப்புயல் தாக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மோசமான வானிலையில் சிக்கியிருக்கும் இப்பகுதியினருக்கு இந்த அறிவிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன் இல்லாத வகையில் இந்த வருடம் பிரித்தானியா முழுவதிலும் சாதனை அளவையும் தாண்டி பனி கொட்டித் தீர்த்துள்ளதால் மக்கள் பெரும் இன்னலை அனுபவித்து வருகின்றனர். பிரிட்டனின் தெற்குப் பகுதிகள் முழுவதிலும் இந்த வாரத்தில் நிலைமை மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் பல பகுதிகளில் 4 அங்குலம் அளவிற்கு பனி அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கும் வேளையில் தற்போது மீண்டும் ஏற்படவுள்ள பனிப் பொழிவினால் உண்டாகவிருக்கும் சிரமங்கள் எண்ணிப் பார்க்க இயலாத ஒன்று என வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மீண்டும் ஒரு பனிப்புயல் தாக்கும் - வானிலை எச்சரிக்கை"

Post a Comment