திரை மறைவில் இருந்து தற்போது திடீரென்று வெளி வந்துள்ளார். கர்நாடக கோர்ட்டில் ஆஜராகி ஆபாச வீடியோவை வெளியிட்ட லெனின் கருப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு போட்டுள்ளனர். ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல என்றும் மறுத்துள்ளார். இந்த நிலையில்தான் நித்யானந்தாவுக்கு அவர் பாத பூஜை செய்வது போன்ற படங்கள் வெளி வந்துள்ளன. புத்தாண்டு தினத்தில் நித்யானந்தா பக்தர்களை சந்தித்து ஆசி வழங்கினார்.
அப்போது முக்கிய சீடர்கள் அவருக்கு கால்களை கழுவி பாதபூஜை செய்தனர். ரஞ்சிதாவும் பாதபூஜை செய்ததாக கூறப்படுகிறது. அந்த படத்தைதான் இண்டர் நெட்டில் பரவ விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நித்யானந்தாவுக்கும் ரஞ்சிதாவுக்கும் மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஆபாச வீடியோ வழக்கில் ரஞ்சிதாவை நித்யானந்தாவுக்கு எதிராக திருப்ப போலீசார் முயற்சி செய்தனர். தன்னை பலாத்காரப் படுத்தியதாக வாக்குமூலம் வாங்கி நித்யானந்தாவுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர அவர்கள் திட்ட மிட்டனர். இதற்காக ரஞ்சிதாவை பல இடங்களில் வலைவீசி தேடினர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்களும் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மாட்டவில்லை. நித்யானந்தா அறிவுரை படியே அவர் மறைந்து இருந்ததாக கூறப்பட்டது. இப்போது கோர்ட்டில் ஆஜராகி வழக்கு போட்டு இருப்பதும் சாமியார் ஆலோ சனைப்படிதான் என்று கூறப்படுகிறது.





0 comments: on "மீண்டும் நெருக்கம்: நித்யானந்தாவுக்கு ரஞ்சிதா பாதபூஜை இண்டர்நெட்டில் பரவும் படங்கள்"
Post a Comment