புகலிடம் வழங்குதல் என்கிற போர்வையில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், அநாதர்கள் ஆகியோரை அடிமைகளாக நடத்தி வேலை வாங்கி வந்த சீன தம்பதிகள் அந்நாட்டு பொலிஸாரிடம் சிக்கி உள்ளனர். அடிமைகளாக நடத்தப்படுவோரில் பெரும்பாலானோருக்கு சம்பளம் கிடையாது.
அத்துடன் ஒழுங்காக உணவு வழங்கப்படுகின்றமையும் இல்லை. வளர்ப்பு நாய்கள் வாய் வைத்துச் சாப்பிடும் பாத்திரங்களுக்குள் இருந்துதான் இவர்களுக்கு உணவு பரிமாறப்படுகின்றது. ஒழுங்கான தங்குமிடம் இல்லை. இவர்கள் தொழில்சாலைகளுக்கு விற்கவும் படுகின்றனர்.
1993 ஆம் ஆண்டில் இருந்து இப்படி நடந்து வந்திருக்கின்றது. அந்நாட்டு பத்திரிகை ஒன்றில் தம்பதிகளின் சட்டவிரோத செயல் குறித்து அண்மையில் வெளியானது.
மனநோயாளர்கள் குறைந்தது எட்டுப் பேராவது தம்பதிகளால் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்று ஆதாரங்களுடன் அப்பத்திரிகை பிரசுரித்தது. இதை அடுத்து பொலிஸார் உஷாராயினர். கடந்த வியாழக்கிழமை கைது இடம்பெற்றது.

0 comments: on "நாய்களாக நடத்தப்படும் அடிமைகள்!"
Post a Comment