தலைப்புச் செய்தி

Monday, January 31, 2011

குண்டுவெடிப்பு: பாக்.,குடன் இந்தியா தகவல் பகிர்வு

2007-ம் ஆண்டு சம்ஜெளதா குண்டுவெடிப்பு வழக்கில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்றும் விசாரணை முடிந்ததும் பாகிஸ்தானுடன் அந்தத் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.


ஆதாரங்களைத் தரமாட்டோம் என நாங்கள் கூறவில்லை. இதெல்லாம் ஆரம்பகட்ட விசாரணைகள். முழு விசாரணையும் முடிந்தபின்னர் பாகிஸ்தானுடன் ஆதாரங்களை பகிர்ந்துகொள்வோம் என அவர் கூறினார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கிடம் இந்தியாவின் நிலையை தெரிவித்துவிட்டோம் என்றார் அவர்.

சம்ஜெளதா குண்டுவெடிப்பின் பின்னணியில் யார் இருக்கக்கூடும் என முன்பு எங்களுக்குத் தெரியவில்லை. தற்போது சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது. 2 பேரை இதில் சந்தேகப்படுகிறோம் என சிதம்பரம் தெரிவித்தார்.

1.வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..

கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை,தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.

2.அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:

குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில்,

கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "குண்டுவெடிப்பு: பாக்.,குடன் இந்தியா தகவல் பகிர்வு"

Post a Comment