1996ஆம் ஆண்டு நடைபெற்ற பல கோடி ரூபாய் மாட்டுத் தீவண வழக்கில் 27 அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேர் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களில் 23 பேருக்கு கடும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சைபாசா நிதியிலிருந்து 8.37 கோடி ரூபாய்களை முறைகேடாக எடுத்தது தொடர்பான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.ஆர். திரிபாதி இன்று (28-01-2011) தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றவாளிகளாகக் கூறப்பட்டுள்ள 62 பேரில் 26 பேர் அரசு அதிகாரிகளாவர். மற்றவர்கள் தீவணம் வழங்கியவர்கள்.
23 குற்றவாளிகளுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூபாய் 20 ஆயிரம் முதல் 4.5 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கான தண்டனை சனிக்கிழமையன்று அறிவிக்கப்படும்.
1996ஆம் ஆண்டு பீகாரின் ஒரு பகுதியாக இருந்த ஜார்கண்ட் பகுதியில் மாட்டுத் தீவண ஊழல் நடைபெற்றது. இது தொடர்பாக மொத்தம் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 2000ஆவது ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டபோது இந்த வழக்குகள் ஜார்கண்ட் மாநிலத்திற்கு மாற்றப்பட்டன. இவற்றில் 32 வழக்குகளில் சிபிஐ தீர்ப்பு வழங்கியுள்ளது.
பீகார் மாநில முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜகநாத் மிஸ்ரா ஆகியோர் 5 வழக்குகளில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளின் விசாரணை ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

0 comments: on "மாட்டுத் தீவன வழக்கில் 62 பேர் குற்றவாளிகள்!"
Post a Comment