டெல்லி: இந்தியாவின் 62வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலாக கொண்டாடப்பட்டது.
இன்று இந்தியாவின் 62வது குடியரசு தினமாகும். இதையொட்டி நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றும் வைபவங்கள் களை கட்டியிருந்தன.
டெல்லியில் குடியரசு தின விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி ராஜ்பாத்தில் இன்று கண்கவர் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. காலை 9.45 மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா கேட்டில் உள்ள போர் வீரர் நினைவிடமான அமர் ஜவானில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இன்னும் சற்று நேரத்தில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவின் கலாச்சார பெருமிதம் மற்றும் ராணுவ பலம் ஆகியவை மக்களுக்குக் காட்டப்படவுள்ளது.
இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், இந்தியாவின் முதல் இலகு ரக போர் விமானமான தேஜாஸ் இடம் பெறவுள்ளது. மேலும் டி-90 டாங்குகள், பிரம்மோஸ் லாஞ்சர், பினாகா மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவை இடம் பெறவுள்ளன.
இந்தியக் கடற்படை சார்பில் ஐஎன்எஸ் விராத், தல்வார் கிலோ கிளாஸ் நீர்மூழ்கி, மிக் 29-கே ஆகியவற்றின் மாடல்கள் அணிவகுத்து வரவுள்ளன. விமானப்படையின் அதி நவீனமும் ஊர்வலத்தில் இடம்பெறவுள்ளது.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின விழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் மேஜர் லய்ஸ்ராம் ஜோதின் சிங்குக்கு அசோக் சக்ரா (மறைவுக்குப் பின்னர்) விருதினை அவர் வழங்குகிறார். அதன் பின்னர் குடியரசு தின அணிவகுப்பு தொடங்கும்.
இந்த ஆண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் டாக்டர் ஹாஜி சுசிலோ பம்பாங் யூத்யோனா பங்கேற்கிறார்.
குடியரசு தின விழாவையொட்டி ராஜ்பாத் மற்றும் டெல்லி முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துணை குடியரசுத் தலைவர் வாழ்த்து:
இந்திய குடியரசின் அடிப்படைக் கொள்ளைகளான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி தனது குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
இந்திய மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து தங்கள் நாட்டை குடியரசாக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் நாம் எத்தனையோ வெற்றிகள் அடைந்துள்ளோம்.
வெற்றிகள் பெற்றிருந்தாலும் நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவு இன்னும் முழுதாக நிறைவேறவில்லை. கோடிக்கணக்கான இந்திய குடிமக்கள் இன்னும் வறுமை, பசி, நோய், அறியாமையால் வாடுகின்றனர்.
இந்திய குடியரசின் அடிப்படைக் கொள்ளைகளான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும். இனி வரவிருக்கும் சவால்களை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.
அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமான வாழ்வு பெற நான் அனைத்து குடிமக்களுக்கையும் வாழ்த்துகிறேன் என்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

0 comments: on "62வது குடியரசு தினம்: நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்"
Post a Comment