ஈரானில் நேற்று 6 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொலை, கொள்ளை மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஒமித் பராக்(24) என்பவன் கராஜ் சதுக்கம் பகுதியில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டான். சிறுவனை பலாத்காரம் செய்த மூன்று பேருக்கு, டெஹ்ரானின் எவின் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தடை செய்யப்பட்ட 'ஈரான் முஜாகிதீன் மக்கள்' என்ற அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இருவரும் நேற்று தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் அகமதினாஜெத் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என முதலில் தகவல் பரவியது. ஈரானில் இந்த மாதத்தில் மட்டும் 52 பேர் தூக்கிலிடப்பட்டனர். கடந்த ஆண்டு மொத்தம் 179 பேர் தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பெரும்பாலானோர் போதை கடத்தல் குற்றவாளிகள்.

0 comments: on "ஈரானில் ஒரே மாதத்தில் 59 பேருக்கு தூக்கு! கடந்த ஆண்டு மொத்தம் 179 பேர் தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது."
Post a Comment