தலைப்புச் செய்தி

Monday, January 10, 2011

அமெரிக்காவில் 6 பேரை சுட்டுக்கொன்ற மர்ம மனிதன்; பெண் எம்.பி. உயிர் ஊசல்

அமெரிக்காவின் ஆளும் ஜனநாயக கட்சியின் பெண் எம்.பி. காபிரி யேஸ், கிப்போர்ட்ஸ் (40). இவர் அரிசோனா மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். நேற்று இவர் அரிசோனாவில் உள்ள துஸ்கான் நகரில் ஒரு வர்த்தக நிறுவனத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அங்கு நுழைந்த மர்மமனிதன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான்.


இதில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அரிசோனா சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ஜான்ரோல் உள்பட 6 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் உடனடியாக அனுமதிக்கப் பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பெண் எம்.பி. காபிரியேல் கிப்போர்ட்ஸ் படுகாயம் அடைந்தார். அவரது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மூளையை துளைத்து சென்றது. இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மீட்டு அரிசோனாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது. உயிருக்கு போராடி வருகிறார். அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். பெண் எம்.பி. சுடப்பட்ட தகவல் அறிந்ததும் அதிபர் பராக் ஒபாமா அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் தனக்கும், நாட்டு மக்களுக்கும் சொல்லொன்னா துயரத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு முட்டாள் தனமான மிகவும் கொடூரமானது. இச்சம்பவம் இனி சமுதாயத்தில் நடைபெற கூடாது என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட மர்மமனிதன் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

வெள்ளைக்கார இளைஞரான அவனுக்கு சுமார் 22 வயது இருக்கும். அவன் குட்டையாக முடி வளர்த்து இருந்தான். இளம் கருப்பு நிறத்தில் உடை அணிந்திருந்தான் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்து விட்டதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த நபரின் பெயர் ஜரத் லாப்னெர் (22) என்றும், அரிசோனாவை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

கிப்போர்ட்ஸ் எம்.பி. திருமணமானவர். இவரது கணவர் மார்கெல்லி. இவர் நாசா விஞ்ஞானி ஆவார். பெண் எம்.பி. சுடப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் எம்.பி. கிப் போர்ட்ஸ்சின் உதவியாளர் மற்றும் 9 வயது பெண் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அமெரிக்காவில் 6 பேரை சுட்டுக்கொன்ற மர்ம மனிதன்; பெண் எம்.பி. உயிர் ஊசல்"

Post a Comment