தலைப்புச் செய்தி

Monday, January 10, 2011

ஈரானில் விமான விபத்து:156 பேர் கதி என்ன?

டெஹ்ரான் : வட மேற்கு ஈரானில்உள்ள உருமியா நகரில்நேற்று இரவு ஈரான் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில், 156 பேர்இருந்தனர். 105 பேர் இறந்ததாக முதலில் வந்த தகவல்தெரிவித்தது. விபத்து குறித்து நகர கட்டுப்பாட்டு பொறுப்பாளர் ரெஜாமவுஸ்மி கூறும் போது, "50 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.எனினும் முழு விபரம் உடனடியாக தெரியவில்லை.


விபத்துக்குள்ளான விமானம் ஹாலந்தின் தயாரிக்கப்பட்ட போக்கர்-100 ரகத்தை சேர்ந்தது என அதிகாரிகள் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரானின் தப்ரிஜ் நகரில் இதே ரக விமானம் ஓடுபாதையை விட்டு விலகியதில் 2 பயணிகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் மிகவும் பழமையான விமானங்கள் மற்றும் சரியான பராமரிப்பு அல்லாத காரணங்களால் அடிக்கடி விமான விபத்து நிகழ்வதாக அங்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளது
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஈரானில் விமான விபத்து:156 பேர் கதி என்ன?"

Post a Comment