மெக்சிகோசிட்டி : மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல்காரர்கள் 24 பேரை கொடூரமாக கொன்றனர்.
மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தல்காரர்கள் போதை மருந்துகளை கடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இடையூறாக இருப்பவர்களை இவர்கள் கொன்று குவித்து வருகின்றனர்.
2006ம் ஆண்டில், அந்நாட்டு அதிபராக பதவியேற்ற பெலிபி கால்டெரான், போதை மருந்து கடத்தல்காரர்களுக்கு எதிரான போரை துவக்கினார். அன்றிலிருந்து இன்று வரை சுமார் 30,000த்துக்கும் அதிகமானவர்களை போதை மருந்து கடத்தல்காரர்கள் கொன்று குவித்துள்ளனர். நேற்று முன்தினம் அகாபுல்கோ நகரில் உள்ள ரிசார்ட்டில் 24 பேரை போதை மருந்து கடத்தல்காரர்கள் கொன்றனர். இவர்களில் 15 பேரின் தலை துண்டிக்கப்பட்டு இருந்தது.





0 comments: on "மெக்சிகோவில் கடத்தல்காரர்கள் 24 பேரை கொன்றனர்"
Post a Comment