துனிசியா சாலைகளில் நிகழ்ந்து வரும் வன்முறை வெறியாட்டங்களுக்கு 23 பேர் பலியாகியுள்ளதை தொடர்ந்து விடுமுறைக்காக அங்கு சென்று தங்கியுள்ள 1800 பிரிட்டன் சுற்றுலா பயணிகளையும் அப்புறப்படுத்தும் பணியில் தாமஸ் குக் பயண ஏற்பாட்டு நிறுவனம் மும்முரமாக இறங்கியுள்ளது.
வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவிற்கு எதிர்வரும் ஞாயிறன்று புறப்படுவதாக இருந்த விமான சேவையையும் இந்நிறுவனம் ரத்து செய்துள்ளது. தற்போது விடுமுறைக்காக அங்கு சென்று தங்கியிருக்கும் பிரித்தானியர்கள் அனைவரும் இன்று புறப்படவுள்ள விமானங்களின் மூலமாக நாடு திரும்ப வேண்டும் எனவும் இந்நிறுவனம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
துனிசியாவில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளதாலும் அந்நாட்டு அரசின் மீது ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தியாலும் கடந்த ஒரு மாத காலமாகவே வன்முறை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ள போதிலும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் கலவரங்கள் தங்களுக்கு நம்பிக்கையின்மையையே ஏற்படுத்தி வருவதாகவும் வாடிக்கையாளர்களின் நன்மை கருதியே பிரித்தானியர்கள் அனைவரையும் திரும்ப அழைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தாமஸ் குக் நிறுவனம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
0 comments: on "துனிசியா சாலைகளில் கலவரம்; வன்முறை வெறியாட்டத்திற்கு 23 பேர் பலி - 1800 பிரிட்டன் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்."
Post a Comment