ஏமன் அதிபர் பதவி விலகக் கோரி, நேற்று தலைநகர் சனா உட்பட நான்கு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்களுக்கு எதிராக அதிபரின் ஆதரவாளர்களும் களத்தில் குதித்தனர்.
அரேபியத் தீபகற்பத்தின் தென்பகுதியில் உள்ள ஏமனில், வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும் தாண்டவமாடுகின்றன. ஜனநாயக நாடு என்று அறிவிக்கப்பட்ட அங்கு, 1978ல் இருந்து அலி அப்துல்லா சலேதான் அதிபராக இருக்கிறார்.
கடந்த ஒரு மாதமாக, ஆப்ரிக்க நாடுகளான டுனீசியா, எகிப்து மற்றும் அல்ஜீரியாவில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களால் தூண்டப்பட்ட ஏமன் மக்கள், தற்போது எதிர்க்கட்சிகளின் தலைமையில் ஒன்று திரண்டு, அதிபர் சலே பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று தலைநகர் சனாவில் சனா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊழலை ஒழித்து பொருளாதாரச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். இவர்களுக்குப் போட்டியாக, அதிபர் சலேயின் ஆதரவாளர்களும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

0 comments: on "ஏமன் அதிபரை பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம்! நேற்று நான்கு இடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்."
Post a Comment