தலைப்புச் செய்தி

Monday, December 6, 2010

மூர்க்கத்தனமான கொலை வெறித் தாக்குதலில் நெற்றியை இழந்த இளைஞர்!

ஸ்டீவன் குளோக் என்ற 26 வயது நபர் ஒருவரால் முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டதால் தனது நெற்றியின் ஒரு பகுதியை இழந்துள்ளார்.

இவரைத் தாக்கிய ஜெக் ஹொப்ஸ் என்ற நபர் அவரின் முகத்தில் குத்தி கீழே வீழ்த்தி பூட்ஸ் கால்களால் தலையில் ஏறி மிதித்துள்ளார்.

ஒரு இடத்தில் பொருள் வாங்கிக் கொண்டிருந்த போது தன்மீது மோதிவிட்டுத் தன்னை முறைத்துப் பார்த்ததாலேயே இவரைத் தாக்கியதாக ஜெக் ஹொப்ஸ் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை நடத்திய போது இவர் மதுபோதையில் இருந்துள்ளார். தாக்கப்பட்ட ஸ்டீவனின் தலையிலும் மூளையிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நெற்றியின் பெரும் பகுதியை அகற்றியே இவருக்குத் தேவையான சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக டாக்டர்கள் கூறினர்.

இவர் தாக்கப்பட்டபின் எடுக்கப்பட்ட படங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது அவற்றைப் பார்த்த நீதிபதி அதிர்ந்து போனார். இவை கொடூரமானவை யாருக்கும் காட்டவேண்டாம் என்று அவர் பொலிஸாரை கேட்டுக் கொண்டார்.

ஆனால் ஸ்டீவனின் குடும்பத்தவர்கள் பிரத்தியேகமாக எடுத்த படங்களையே இப்போது வெளியிட்டுள்ளனர். குடிபோதை சமூகத்தில் எந்தளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

அது மற்றவர்கள் வாழ்வை எந்தளவு பாதிக்கின்றது என்பதை சமூகத்துக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே இந்தப் படங்களை வெளியிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய 17 வயதான ஹொப்ஸ் இப்போது பத்து வருட தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மூர்க்கத்தனமான கொலை வெறித் தாக்குதலில் நெற்றியை இழந்த இளைஞர்!"

Post a Comment