தலைப்புச் செய்தி

Monday, December 6, 2010

ஆப்கானிஸ்தானில் விசேட காரணங்களுக்காக மேலதிக வார இறுதி விடுமுறை அமுல்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பனிப்படலமே இந்த விஷேட விடுமுறைக்குக் காரணமாகும்.இந்த மேலதிக வார இறுதி விடுமுறை தொடர்ந்து சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது .

மாசடைதலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு இந்த விடுமுறை ஏற்பாட்டை அறிவித்தாலும் அடுத்த பருவ காலத்தில் மேலதிகமாக வேலை செய்யவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதிகள் அனைத்தும் இப்போது பனிப்படலமாகக் காட்சியளிக்கின்றன.

இந்தப் பனிப்படலத்துக்கு ஊடாக டீசலில் இயங்கும் பெரும்பாலான வாகனங்கள் பயணம் செய்வதால் வளி மண்டலம் அதிகம் மாசடைந்த நிலையில் காணப்படுகின்றது. வீதிகளில் அகற்றப்படாத குப்பைகள் பல நாட்கள் தேங்கிக் கிடப்பதால் அவற்றிலிருந்து வரும் துர்நாற்றமும் வளியில் கலந்து நிலைமையை மேலும் மோசமாக்கிவருகின்றது.

இந்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு மாசடைதலைத் தடுக்கும் வகையில் மேலதிக வார இறுதி விடுமுறையை இவ்வருட கடைசி வரை வழங்க அந்த நாட்டின் அமைச்சரவைத் தீர்மானித்துள்ளது.

காபூலில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பும் பெருமளவு பலப்படுத்தப்பட்டிருப்பதால் பொது மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

மக்கள் வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமைகளில் தங்களது கார்களில் பயணம் செய்வதைக் குறைத்துக் கொள்ளுமாறும் அமைச்சரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஆப்கானிஸ்தானில் விசேட காரணங்களுக்காக மேலதிக வார இறுதி விடுமுறை அமுல்!"

Post a Comment