கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மக்கள் தயாராகி வரும் இந்த நேரத்தில் பிரிட்டனின் முக்கிய இடங்களில் மும்பை பாணித் தாக்குதல்களை தீவிரவாதிகள் நிகழ்த்த வாய்ப்புள்ளதால் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகமாகக் கூடும் ஷாப்பிங் மையங்களில் அதிகப்படியான ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய தெருக்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கெண்ட்டில் உள்ள பளுவாட்டர் வளாகம், மேற்கு லண்டன் பகுதியில் உள்ள சுவிஸ் வெஸ்ட்பீல்ட் ஷாப்பிங் மையம் ஆகியவற்றில் ராணுவ வீரர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.பிற இடங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அல்கொய்தாவினர் மும்பை பாணித் தாக்குதல்களை பிரிட்டனில் எந்த நேரமும் நிகழ்த்தலாம் என புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாலும் பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிக அளவில் ஒரே இடத்தில் கூடும் போது எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாலுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.





0 comments: on "மும்பை பாணித் தாக்குதல் அச்சத்தில் முக்கிய இடங்களில் ராணுவ வீரர்கள் குவிப்பு"
Post a Comment