விமானப் பயணிகளின் அந்தரங்க மறைவிடங்களும் இப்போது நவீன ஸ்கேனர் கருவிகளால் படம்பிடிக்கப்படுவதால் பல பயணிகள் அசௌகரியத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இப்போது அதற்கு ஒரு மாற்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதுதான் Anti Radiation Underwear (கதிர்வீச்சுக்கு எதிரான உள்ளாடை) கொலராடோவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதை விற்பனை செய்கின்றது.
இதில் அத்திரமர இலையின் வடிவில் பாலுறுப்பை மூடுவதற்கான பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கையான மற்றும் மனிதனால் செய்யப்படும் கதிர்வீச்சின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ளக்கூடிய ஒருவகைத் துணியால் இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
இது எல்லாவகையான கதிர்வீச்சிலிருந்தும் காப்பாற்றுவதோடு, மருத்துவ மற்றும் ஏனைய வகையான எடல் ஸ்கேனர்களின் போது பாலுறுப்புக்கள் படமாக்கப்படுவதையும் தடுக்கும் என்று இதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு இதே அடிப்படையில் மார்புக் கச்சைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.






0 comments: on "விமான நிலைய ஸ்கேனரிலிருந்து அந்தரங்க மறைவிடங்களைக் காக்க நவீன உள்ளாடைகள்!"
Post a Comment