தலைப்புச் செய்தி

Friday, September 10, 2010

குர்ஆன் பிரதியை எரிக்கும் திட்டம்: இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு கண்டனம்

மக்கா,செப்.10:செப்டம்பர் 11 தாக்குதல் நினைவுத் தினத்தில் குர்ஆன் பிரதியை எரிக்கத் திட்டமிட்டிருக்கும் அமெரிக்காவின் ஃப்ளோரிடா சர்ச்சின் புரோகிதன் டெர்ரி ஜாண்சனின் செயல் பகைமையை வளர்த்தும் அநியாயச் செயல் என இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் எக்மலுத்தீன்


கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: "நல்லுபதேசம் செய்யவேண்டிய புரோகிதர் ஒருவரின் இத்தகைய முயற்சி பீதியை பரப்புகிறது. உலகின் மகத்தான நூலான புனித குர்ஆனின் பிரதியை எரிக்கும் திட்டம் அநியாயமான முறையில் துவேசத்தை உருவாக்கும்.

மதத் தீவிரவாத அச்சுறுத்தலுக்கிடையில் மதங்களுக்கிடையே அமைதியான கலாச்சாரத்தை நிலைப்பெறச் செய்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது உலக சமூகத்தின் கடமையாகும். இந்த முயற்சிக்கு அமெரிக்க அதிபர் ஒபாம உள்ளிட்ட பிரபலத் தலைவர்கள் கண்டிக்க வேண்டும்." இவ்வாறு எக்மலுத்தீன் தெரிவித்துள்ளார்.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "குர்ஆன் பிரதியை எரிக்கும் திட்டம்: இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு கண்டனம்"

Post a Comment